மாரடைப்புக்கு வழிவகுக்கும் கொலஸ்ட்ரால்... எப்படி கட்டுப்படுத்தலாம்?
வெளிநாட்டில் ஒருவருக்கு 60 வயதில் இதயநோய் வருகிறது என்றால் இந்தியாவில் 45 வயதிலேயே இதயநோய் வந்து விடுகிறது.
இப்போதெல்லாம் 30 வயதில் கூட மாரடைப்பு ஏற்படுகிறது. இதில் கொலஸ்ட்ரால் முக்கிய பங்கு வகிக்கிறது. எல்.டி.எல். எனப்படும் கெட்ட கொழுப்பு 100 மி.கி.,க்கு கீழே இருக்க வேண்டும்.
இதற்கு மேல் இருந்தால் மாரடைப்பு வரும் தன்மை கூடுகிறது. இந்தியர்களுக்கு இது அதிகம். சர்க்கரை நோயாளிகளுக்கும் அதிகமாக இருக்கும்.
ஒரே இடத்தில் நீண்டநேரம் அமர்ந்து வேலை செய்பவர்களுக்கு கொலஸ்ட்ரால் அதிகமாகிறது.
கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்த டாக்டர்கள் பரிந்துரைக்கும் மாத்திரைகளை எடுத்துக்கொள்ளலாம்.
காய்கறி, கீரை, பழங்களை அதிகம் சாப்பிட வேண்டும். உணவில் சாதத்தை விட காய்கறிகளின் அளவு அதிகமாக இருக்க வேண்டும்.
பொரித்த உணவு, சீனி, வெல்லம், நாட்டு சர்க்கரை தவிர்க்க வேண்டும்.
தினமும் 45 நிமிடம் வேக நடைபயிற்சி, நல்ல துாக்கம் அவசியம். உடலை சுறுசுறுப்பாக வைத்திருக்க வேண்டும். முக்கியமாக மனதை நிம்மதியாக வைத்திருக்க வேண்டும்.