பிரசவத்திற்கு பின் பெண்கள் அழுவதும் கோபப்படுவதும் இயல்பா?

பெண்கள் பொதுவாக பிரசவத்திற்கு பிறகு மிகுந்த மனச்சோர்வோடு காணப்படுவார்கள் என டாக்டர்கள் கூறுகின்றனர்.

பிரசவத்திற்கு பின் இவ்வாறு சில பெண்களுக்கு ஏற்படுவது இயல்பானது. காரணம் இன்றி அழுகை, சோகம், மன அழுத்தம் ஏற்படும்.

துாக்கமின்மை, குழந்தை கவனிப்பில் குறைபாடு ஏற்படுத்தல் போன்றவற்றை பிரசவத்திற்குப் பிந்தைய ப்ளூஸ், பேபி ப்ளூஸ் என்று அழைக்கப்படுகிறது.

தற்போது 7ல் ஒரு பெண்ணுக்கு பிரசவத்திற்குப் பிறகு முதல் 2 வாரங்களில் அனுபவிக்கும் உணர்ச்சி குறைபாடு, மனநிலை ஊசலாட்டம், பதற்றம் உள்ளிட்ட அறிகுறிகளோடு காணப்படுகிறார்கள்.

பிரசவத்திற்கு பின் ஹார்மோன் மாறுபாடு, வாழ்வியல் மாற்றம், தாய்மை பொறுப்பு ஆகியவற்றால் கூட இது ஏற்படும்.

இவற்றைக் கண்டு அச்சம் கொள்ள தேவையில்லை. மனநல மருத்துவரை அணுகி ஆலோசனை பெற வேண்டும்.

இவ்வாறு உள்ள பெண்களுக்கு அன்பும் அரவணைப்பும் ஆறுதலும் கொடுத்தாலே போதும் அப்பிரச்னையில் இருந்து எளிதில் மீளலாம்.