ஹெல்த்தியான கம்பு சாக்லேட் பிஸ்கட் ரெசிபி

தேவையானப் பொருட்கள்: கம்பு மாவு - 1 கப், கோதுமை மாவு, வெண்ணெய் - தலா 0.25 கப்.

நாட்டு சர்க்கரை- 0.50 கப், பேக்கிங் பவுடர் - 0.50 டீஸ்பூன், பேக்கிங் சோடா - 0.25 டீஸ்பூன், உப்பு - 1 சிட்டிகை, சாக்கோ சிப்ஸ் - தேவையானளவு.

கம்பு மாவு, கோதுமை மாவு, பேக்கிங் பவுடர், பேக்கிங் சோடா மற்றும் உப்பு அனைத்தையும் சேர்த்து சலித்து வைக்கவும்.

ஒரு பாத்திரத்தில் வெண்ணெய், சலித்து வைத்த மாவு, சர்க்கரை சேர்த்து நன்கு பிசையவும்.

அத்துடன் சாக்கோ சிப்ஸ் சேர்த்து பிசைந்து பிரிட்ஜில் அரை மணி நேரம் வைக்கவும்.

பின் மாவை எடுத்து உருட்டி, விரும்பிய வடிவங்களில் அழுத்தி பேக்கிங் ஷீட்டில் வைத்து, 180 டிகிரியில் பத்து நிமிடங்கள், பிரீ ஹீட் செய்து, 12 நிமிடங்கள் பேக் செய்து எடுக்கவும்.

இப்போது, ஆரோக்கியமான மற்றும் சுவையான கம்பு மாவு சாக்கோ சிப்ஸ் பிஸ்கட் ரெடி. குட்டீஸ்கள் ஆர்வமுடன் விரும்பிச் சாப்பிடுவர்.