ஹெல்த்தி மற்றும் டேஸ்டியான ராகி பிரவுனி

தேவையானப் பொருட்கள்: கேழ்வரகு (ராகி) மாவு, எண்ணெய் - முக்கால் கப், முட்டை - 2, சர்க்கரை - அரை கப், காப்பித்தூள் - அரை டேபிள் ஸ்பூன், நறுக்கிய சாக்லேட் துண்டுகள் - கால் கப்.

கோகோ பவுடர் - அரை கப், வெண்ணிலா எசன்ஸ் - 1 டேபிள் ஸ்பூன், பேக்கிங் பவுடர் - கால் டேபிள் ஸ்பூன், சிசீலிங் தட்டு - 2, ஸ்கூப் ஐஸ்க்ரீம், சாக்லெட் சாஸ் - தேவையானளவு.

ஒரு பாத்திரத்தில் முட்டை, சர்க்கரை, ரீபைண்ட் ஆயில் மற்றும் கோகோ பவுடர் சேர்த்து சர்க்கரை கரையும் வரை கலக்கவும்.

இதில், வெண்ணிலா எசன்ஸ், பேக்கிங் பவுடர், கால் டீஸ்பூன் உப்பு மற்றும் காபி பவுடர் சேர்த்து நன்றாக கலக்கவும்.

பின்னர், கேழ்வரகு மாவு, சிறிதாக நறுக்கிய சாக்லெட் துண்டுகளை சேர்த்து கலக்கி, கேக் டின்னில் மாற்றவும். (கேக் டின் மேல் பேக்கிங் ஷீட் போட்டுக் கொள்ளவும்)

இதை ஓவனில் 180 டிகிரி வெப்பத்தில் 25 முதல் 30 நிமிடங்கள் வரை பேக் செய்து, சிசீலிங் தட்டை சூடுபடுத்திய பின் அதன் மேல் பிரவுனி துண்டு வைக்கவும்.

தொடர்ந்து, சிறிய துண்டுகளாக்கி, அதனுடன் ஐஸ்கிரீம் சாக்லெட் சாஸ் சேர்த்து பரிமாறலாம்.