வெப்ப வாதம்... டாக்டர் பரிந்துரையின்றி ஆஸ்பிரின், பாராசிட்டமல் மாத்திரைகளை சாப்பிடாதீர்
கோடை காலத்தில் அதிகளவில் மோர், இளநீர், உப்பு கலந்த எலுமிச்சை சாறு உள்ளிட்டவற்றை எடுத்துக் கொள்ளலாம்.
வியர்வை எளிதில் வெளியேறும்படி, மிருதுவான, தளர்ந்த, காற்றோட்டமுள்ள, பருத்தி ஆடைகளை அணிய வேண்டும்.
மயக்கம், உடல்சோர்வு, அதிக தாகம், தலைவலி, மணிக்கட்டு, அடிவயிற்றில் வலி ஏற்பட்டால், அருகில் உள்ளவர்களை உதவிக்கு அழைத்து, உடனடி மருத்துவ சிகிச்சை பெறுவது அவசியம்.
வெப்ப வாதத்தால் பாதிக்கப்பட்டு, மயக்கம் அடைந்திருந்தாலோ, உடல் சோர்வாக காணப்பட்டாலோ, உடனடியாக நிழல் தரக்கூடிய இடங்களில், ஒரு பக்கமாக படுக்க வைக்க வேண்டும்.
அவர்களுக்கு, இளநீர், மோர் அருந்த கொடுத்து, உடல் சூட்டை குறைக்கலாம். நீரில் நனைத்த துணியை வைத்து, உடல் சூட்டை தணிக்க வேண்டும்.
வெப்ப வாதத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு காய்ச்சல் என நினைத்து, ஆஸ்பிரின், பாராசிட்டாமல் மாத்திரை கொடுப்பதை தவிர்க்க வேண்டும்.
ஒரு வேளை கொடுத்தால், எதிர்விளைவுகளை ஏற்படுத்தும். சிலருக்கு ஆபத்தையும் ஏற்படுத்தலாம். எனவே, டாக்டர் பரிந்துரைப்படி மட்டுமே, மாத்திரைகளை எடுக்க வேண்டும்.