ஹெல்த்தியான வெள்ளரிக்காய் கூட்டு ரெசிபி இதோ !

தேவையானப் பொருட்கள்: வெள்ளரிக்காய் - 4, பாசிப்பருப்பு - 100 கிராம், பச்சை மிளகாய் - 2, தேங்காய் துருவல் - 0.5 கப், சின்ன வெங்காயம் - 6,

கடுகு, உளுத்தம் பருப்பு, பெருங்காயத்துாள் - சிறிதளவு

மஞ்சள் துாள், சீரகம், உப்பு, எண்ணெய், கறிவேப்பிலை மற்றும் தண்ணீர் - தேவையான அளவு.

சுத்தம் செய்து நறுக்கிய வெள்ளரிக்காயுடன் பாசிப்பருப்பு, தண்ணீர் சேர்த்து வேக வைக்கவும்.

கடாயில் சிறிது எண்ணெய் விட்டு சூடானவுடன் உளுத்தம் பருப்பு, கடுகு, சீரகம், கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும்.

பின், வேக வைத்த வெள்ளரிக்காய், தேங்காய், உப்பு, பெருங்காயத்துாள், மஞ்சள் துாள், நறுக்கிய சின்ன வெங்காயம், பச்சைமிளகாய் போட்டு கொதிக்க விட்டால், வெள்ளரிக்காய் கூட்டு இப்போது ரெடி.

வெள்ளரிக்காயில் நீர்ச்சத்து மிகுந்துள்ளதால் உடல் சூட்டை தணித்து, குளிர்ச்சி அளிக்கக்கூடியது. அனைத்து வயதினரும் விரும்பிச் சாப்பிடுவர்.