சருமப்பராமரிப்பில் பப்பாளி மற்றும் கீரையின் மேஜிக் இதோ

பழங்களில் தங்க தரச் சான்றிதழ் பெற்றது பப்பாளி. இதை துண்டுகளாக நறுக்கி தினமும் ஒரு கப் சாப்பிடலாம்.

கேரட் ஜூஸ், 2 கமலா ஆரஞ்சு அல்லது வாரத்தில் 3 நாட்கள் புதினா கலந்த மோர் குடிக்கலாம். மோரிலுள்ள லேக்டிக் அமிலம், புதினாவுடன் சேர்ந்து தோலின் அடர்த்தியைக் குறைக்கும்.

உடல் உஷ்ணத்தைக் குறைக்க தினமும் 2 இளநீர், வெள்ளரிக்காய் சாப்பிடலாம்.

கண்களை சுற்றி கருவளையம் இருந்தால், 'விட்டமின் கே' அதிகமுள்ள கீரைகள், குறிப்பாக பொன்னாங்கண்ணி, மணத்தக்காளி, முருங்கைக் கீரை சாப்பிடலாம். இந்த மூன்றும் கீரைகளில் சூப்பர் ஸ்டார்கள்.

நாள் முழுதும் 'ஏசி'யில் இருந்தால், உடலிலுள்ள நீர்ச்சத்தை 'ஏசி' உறிஞ்சிவிடும். தோல் உரியத் துவங்கும். ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை தண்ணீர் குடிக்க வேண்டும்.

'பிக்மென்டேஷன்' எனும் தோலில் சில பகுதிகளில், 'மெலனின்' உற்பத்தி அதிகமிருந்தால், டாக்டரின் ஆலோசனைபடி, இணை உணவான 'விட்டமின் சி, இ, ஏ' மாத்திரை எடுக்கலாம்.