இந்தியாவில் கோடையில் சில்லுன்னு இருக்க சில இடங்கள்
அழகிய ஏரிகள், மலைகள், பசுமையான தாவரவியல் பூங்கா, பொம்மை ரயிலில் செல்லும் போது கண்முன்னே விரியும் இயற்கை காட்சிகள் என மலைகளின் ராணியான ஊட்டி இயற்கை பிரியர்களுக்கு அழகிய விருந்தளிக்கிறது.
அமைதியான கடற்கரைகள், மேற்குத் தொடர்ச்சி மலைகளின் பச்சை மரகத மலைகள், நறுமணமுள்ள காபி தோட்டங்கள், மிதக்கும் படகு இல்லத்தில் அமைதியான பயணம் என ஈர்க்கிறது கேரளா.
பளபளக்கும் இரவு வாழ்க்கை மற்றும் அமைதியான கடற்கரைகள் கோவாவை இந்தியாவில் ஒரு அழகிய விடுமுறை இடமாக மாற்றுகிறது. கோடைக்கு இதமாக கடல் தண்ணீரில் சாகச விளையாட்டுகளை விளையாடலாம்.
சம்மர் என்றாலே டக்கென்று காஷ்மீர் நினைவுக்கு வரும். பனி படர்ந்த மலைகளுக்கு நடுவேயுள்ள ஏரிகளில் ஷிகாராவில் பயணிக்கும் அனுபவமே தனிதான்.
வண்ணமயமான மலர்த்தோட்டங்கள், பனி போர்த்திய மலைச்சிகரங்கள், ஆப்பிள் தோட்டங்கள் என சுற்றுலாப்பயணிகளை தன்பக்கம் கவர்ந்துள்ளது மணாலி. உலகின் பல இடங்களில் இருந்து ஓய்வெடுக்க கூட்டம் திரளுகிறது.
டார்ஜிலிங்... கஞ்சன் ஜங்கா மலைத்தொடரின் கம்பீரமான பனி மூடிய சிகரங்கள், அழகிய ஏரிகள், பச்சை மரகத குன்றுகள் வழியாக வளைந்து செல்லும் பொம்மை ரயில் என கண்முன்னே கனவுலகம் விரியக்கூடும்.
'இந்தியாவின் ஸ்காட்லாந்து' என அழைக்கப்படும் கூர்க் கர்நாடகாவில் உள்ள ஒரு மலைவாசஸ்தலம். அடர்ந்த காடுகள், அழகிய புல்வெளிகள், நீர்வீழ்ச்சிகள், நறுமணமுள்ள காபி தோட்டங்கள் என சில்லென்ற சொர்க்கமாகும்.
இயற்கை எழிலும், பனிபடர்ந்த மலை சிகரங்களும் சுற்றுலாவாசிகளை கவர்ந்திழுக்கும் சிறப்பம்சங்களாக சிம்லாவில் திகழ்கின்றன. நகர்ப்பகுதியின் பரபரப்பில் இருந்து தப்பித்து ரிலாக்ஸாக வைக்கிறது.
அழகிய மலைகள், கம்பீரமான புல்வெளிகள் என கண்கொள்ளாக் காட்சிகளின் நடுவே அமைந்துள்ள கொடைக்கானல் மலைகளின் இளவரசி என அழைக்கப்படுகிறது; கோடைக்கு குளிர்ச்சியான பிரபலமான இடங்களில் ஒன்று.
கேரளாவின் மேற்குத் தொடர்ச்சி மலைகளால் அமைந்துள்ள மூணாறு ஒரு அழகிய, பிரபலமான மலைவாசஸ்தலம். பளபளக்கும் தேயிலை தோட்டங்கள், அழகிய புல்வெளிகள், மலைப்பகுதிகளில் செல்பி எடுத்து மகிழலாம்.
ஒன்றோடொன்று இணைந்துள்ள அழகிய தால், நைஜின் ஏரிகளில் நீண்ட படகுச்சவாரி, படகு வீடுகள், கண்கவரும் முகலாய மலர்த்தோட்டங்கள் என ஸ்ரீநகரில் அழகாக நேரம் நகர்கிறது.