சமையல் சிறக்க எளிய டிப்ஸ் இதோ...

காலிபிளவரை வேக வைக்கும் போது சிறிதளவு வினிகர் சேர்த்தால், அதிலிருந்து வரும் துர்நாற்றத்தை தவிர்க்க முடியும்.

முள்ளங்கி சாம்பார் செய்யும்போது, முள்ளங்கியை சிறிது எண்ணெயில் நன்றாக வதக்கி எடுத்து, பின், சாம்பார் வைத்தால் முள்ளங்கி சுவை அதிகரித்து, சாம்பாரும் ருசியாக இருக்கும்.

கருவேப்பிலையில் துவையல் செய்கிறீர்களா... சிறிதளவு இஞ்சி சேர்த்து பாருங்கள். சுவை துாக்கலாக இருக்கும்.

பச்சை பயிறில் சுண்டல் செய்யும் போது, அதை லேசாக வறுத்து பின் சுண்டல் செய்தால், சுண்டல் உதிரியாகவும், மணமாகவும் இருக்கும்.

வெஜிடபிள் பிரியாணி செய்யும் போது, குக்கர் மூடியை திறந்ததும், சிறிது எலுமிச்சை சாறு சேர்த்து கிளறினால், சாதம் உதிரியாக இருக்கும்.

கத்திரிக்காய் கூட்டு அல்லது பொரியல் செய்யும் போது, சிறிதளவு கடலை மாவை துாவி, சில நிமிடங்கள் வதக்கி இறக்கினால், நல்ல மணத்துடன் சுவையாக இருக்கும்.

மைசூர்பாகு மொறுமொறுப்பாக, பக்குவமாக வர அடுப்பில் இருந்து இறக்கும் முன், ஒரு சிட்டிகை சோடா உப்பு சேர்த்து நன்கு கிளறவும்.

கிழங்குகள் விரைவாக வேக, உப்பு கலந்த தண்ணீரில், 10 நிமிடங்கள் ஊறவைத்து வேக வைக்கலாம்.

கிரேவி நீர்த்து போனால், வறுத்த வேர்க்கடலை பொடி சேர்த்து கொதிக்கவிட்டால் கெட்டியாகி விடும்.