வாயுவைக் கட்டுப்படுத்த இதோ சில வழிகள்
கிழங்கு, பயறுகளை குறைத்துக் கொள்ளுங்கள். ஆவியில் அவித்த உணவை அதிகம் சாப்பிடுங்கள்.
வறுத்தது, பொரித்தது, பாஸ்ட் புட், பாக்கெட் புட், ஸ்நாக்ஸ் அடிக்கடி வேண்டாம். பாட்டில் பானங்களை மறந்துவிடுங்கள்.
அவசியம் உடற்பயிற்சி செய்ய வேண்டும்.
தினமும் போதுமான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும்.
வெற்றிலை, பாக்கு, புகையிலை, மதுப்பழக்கத்தை தவிர்க்க வேண்டும்.
டாக்டரிடம் கேட்காமல் அல்சருக்கும், பேதிக்கும் மாத்திரை, மருந்து சாப்பிடாதீர்கள்.
வாயுவை வரவேற்கும் மொச்சை, பட்டாணி, பயறு, வாழைக்காய், உருளைக்கிழங்கு, சேனைக்கிழங்கு, சிப்ஸ், நுாடுல்ஸ், முட்டை போன்ற பல உணவுகளை தவிர்த்து விடுங்கள்.
எந்த உணவைச் சாப்பிட்டால் உங்களுக்கு வாயு அதிகரிப்பதாகத் தோன்றுகிறதோ, அதையும் முடிந்தவரை குறைத்துக் கொள்ளுங்கள்.