வாய்க்கசப்பு ஏற்படுவது ஏன்?

வாய் துர்நாற்றம், வாய்க்கசப்பு, நாக்கு வறண்டு போகும் உணர்வு நடுத்தர வயதினர், முதியோருக்கு அதிகம் ஏற்படும் பிரச்னைகளுள் ஒன்று. இதற்குப் பல காரணங்கள் உள்ளன.

காலை அலுவலகம் கிளம்பும் அவசரத்தில் சிலர் சரியாக பல் துலக்க மாட்டர். இதனால் வாய் துற்நாற்றம் ஏற்படலாம். குறைந்தது ஒரு நிமிடம் வரை பல் துலக்குவது வாய் துர்நாற்றத்தைப் போக்க உதவும்.

நாள்பட்ட நீரிழிவு பாதிப்பு, கேஸ்ட்ரைட்டிஸ், அல்சர் கொண்டவர்களுக்கு வாய் துர்நாற்றாம் உண்டாகலாம். மேலும், அடிக்கடி வாய்க்கசப்பு ஏற்படலாம்.

புகை, மதுப் பழக்கம் கொண்டவர்களுக்கு வாய்க்கசப்பு மற்றும் உடல் நீர் அளவு குறைபாடு உண்டாகக்கூடும்.

தினசரி மருந்து மாத்திரை சாப்பிடும் முதியோருக்கு நாவில் உள்ள சுவை அரும்புகள் மாத்திரை ரசாயனங்களால் பாதிக்கப்படலாம். இதனால் நாக்கு சுவை அறிய சிரமப்படும். மேலும் அடிக்கடி வாய்க்கசப்பும் உண்டாகும்.

புற்றுநோய்க்கு கீமோதெரபி, ரேடியேஷன் சிகிச்சை பெறுபவர்களுக்கு வாய்க்கசப்பு ஏற்படலாம்.

சாப்பிட்டவுடன் சரிவர வாய் கொப்பளிக்காவிட்டால், உணவுத் துணுக்குகளால் பல் இடுக்குகளில் ஒவ்வாமை ஏற்படக்கூடும். இது வாயிலுள்ள நல்ல பாக்டீரியாக்களை அழிப்பதால், துர்நாற்றம், கசப்பு ஏற்படலாம்.

அடிக்கடி தேநீர், காபி உள்ளிட்ட கஃபைன் பானங்கள் அருந்துவோருக்கு வாய்க்கசப்பு ஏற்படலாம்.

வெற்றிலை, புகையிலை போடும் பழக்கம் உள்ளவர்களுக்கு வாயில் பலவித பிரச்னைகள் ஏற்படும். இவர்களுக்கு வாய்க்கசப்பு, அதீத தண்ணீர் தாகம், வாய்ப்புண் ஏற்பட வாய்ப்புகள் அதிகம்.