ஒரு வாரத்துக்குள் தனியா செடிகளை வளர்க்க இதோ டிப்ஸ்
புதிய தரமான தனியா விதைகளை சிறிதளவு எடுத்து, தண்ணீரில் ஒரு இரவு முழுவதும் ஊற வைக்கவும்.
ஒரு அகலமான பூந்தொட்டியில் உரம், எரு கலந்த மண் கலவையில், விதைகளை மேற்பரப்பில் சமமாக தூவி விட்டு, மீண்டும் ஒரு அடுக்கு மண்ணை பரப்பவும்.
பின் தண்ணீரை மிருதுவாக தெளிக்கவும்; ஈரப்பதம் அதிகமாக இருக்கக்கூடாது.
வெளிச்சம் குறைவான இடத்தில் இந்த பூந்தொட்டியை வைக்கவும்; தினமும் 4 - 6 மணி நேரம் சூரிய ஒளி பட்டாலே போதுமானது.
ஓரிரு வாரத்தில் செடிகள் வளர்ந்தவுடன், வேறொரு தொட்டிக்கு மாற்றி விடலாம்.
இல்லாவிட்டால், முன்கூட்டியே சீரான இடைவெளியில் விதைகளை தூவியும், இடம் மாற்றாமல் அப்படியே வளர்க்கலாம்.
குறிப்பிட்ட கால இடைவெளியில், செடியில் பூ பூக்கும் முன்பாக அவ்வப்போது பறித்துவிடலாம்.