பப்பாளி அல்வா ரெசிபி இதோ
தேவையானப் பொருட்கள்: பப்பாளி பழம் - 1, ஆரஞ்சு ஜூஸ் - 1 கப், சர்க்கரை - 500 கிராம்.
பால் - 1 லிட்டர், நெய் - 250 கிராம், முந்திரி, ஏலக்காய் துாள் - தேவையான அளவு.
பப்பாளி பழத்தை தோல் நீக்கி, சிறு துண்டுகளாக நறுக்கி பாலில் வேக வைக்கவும்.
அதை விழுதாக அரைத்து, ஆரஞ்சு பழ ஜூஸ் சேர்க்கவும்.
அடுப்பில் கடாயை வைத்து சூடானவுடன் நெய், சர்க்கரையுடன் அரைத்த விழுதை சேர்த்து கிளறவும்.
சுருண்டு வரும்போது முந்திரி, ஏலக்காய் துாள் போட்டு இறக்கவும். ஆறிய பின் துண்டுகளாக்கவும்.
இப்போது சத்துகள் நிறைந்த மற்றும் சுவையான பப்பாளி அல்வா ரெடி.