சித்திரை முதல் நாள் தமிழ் புத்தாண்டு…. வரலாறு அறிவோமா!

சித்திரை மாதம் தான் முதல் மாதம் என்பதை நெடுநல்வாடை, பதினைந்தாம் நூற்றாண்டைச் சேர்ந்த புட்பவிதி போன்ற நூல்கள் எடுத்து கூறுகின்றன.

தமிழர்கள் சூரியனை அடிப்படையாக வைத்து தங்களின் தமிழ் புத்தாண்டை கொண்டாடி வருகின்றனர்.

ஒரு வருடத்தில் மொத்தம் 12 மாதங்கள், அதனை அடிப்படையாக கொண்டு சித்திரை மாதமே தமிழ் நாட்காட்டியின் முதல் மாதமாக உள்ளது.

பூமி சூரியனை ஒரு தடவை சுற்றிவர 365 நாட்கள் 6 மணி நேரம் 11 நிமிடம் 41 நொடிகள் ஆகின்றன. இதை வைத்து தான் தமிழ் வருடத்தின் கால அளவும் பின்பற்றப்படுகிறது.

சூரியன் மேஷ ராசியில் நுழைவதை தமிழ் வருடத்தின் தொடக்கம் என்றும், மீன ராசியிலிருந்து வெளிவருவதை இறுதி என வைத்து தமிழ் புத்தாண்டு கணக்கிடப்படுகிறது.

தை முதல் நாள் தான் தமிழ் புத்தாண்டு என்று 2008ல் அறிவிக்கப்பட்டிருந்தது. பல ஆண்டுகளமாக இது தொடர்பாக குழப்பம் இருந்தது.

பின்னர் 2011ல் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக அன்றைய அதிமுக அரசு அதை ரத்து செய்து மீண்டும் சித்திரை முதல் நாளை புத்தாண்டாக அறிவித்தது.

கேரளம், மணிப்பூர், அசாம் போன்ற மாநிலங்களிலும், நேபாளம், பர்மா, இலங்கை போன்ற அண்டை நாடுகளிலும் சித்திரை மாதத்தில் தான் புத்தாண்டு கொண்டாடப்படுகிறது.