காற்றில் நச்சு எவ்வளவு? அறிவோமா?

உலக மக்கள் தொகையில் 40 சதவீதம் பேர், ஓசோன் வாயுவினால் பாதிப்புக்கு உள்ளாகின்றனர்.

இதில் முதலிடத்தில் ஆசியா, தொடர்ந்து ஐரோப்பா, வட அமெரிக்கா உள்ளதென, ஆய்வு தெரிவித்துள்ளது.

ஓசோன் வாயு (ஓ3) என்பது மூன்று ஆக்சிஜன் அணுக்களால் ஆனது.

90 சதவீத ஓசோன், வளிமண்டலத்தில் மேல் பகுதியிலும், 10 சதவீதம் தரைமட்ட வளிமண்டலத்திலும் உள்ளன.

தொழிற்சாலைகள், வாகன புகையுடன் சூரிய ஒளி வினைபுரிவதால் தரைமட்ட ஓசோன் உருவாகிறது. இது காற்று மாசுவை உருவாக்குகிறது.

இதை சுவாசிப்பதால், நுரையீரல் பாதிப்பு, சுவாசப் பிரச்னை ஏற்படும் என விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர்.