கோடை வெயிலால் உண்டாகும் பாதிப்புகளை தவிர்ப்பது எப்படி?
மனித உடலின் சராசரி வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸ்.
வெயிலின் தாக்கத்தால் சுற்றுப்புற வெப்பநிலை உடலின் சராசரி
வெப்ப நிலையை விட அதிகமாகும் போது கோடை வெயிலால் ஏற்படும் பாதிப்புகள்
அதிகமாகும்.
அதிக தாகம், தலைவலி, உடல் சோர்வு, தலை சுற்றல், தசை பிடிப்பு, மயக்கம் போன்ற பாதிப்புகள் ஏற்படும்.
வெயிலின் தாக்கத்திலிருந்து தப்பிக்க அதிக தண்ணீர் குடிக்க வேண்டும்.
இறுக்கமான ஆடைகளை தவிர்த்து தளர்வாக பருத்தி ஆடைகளை அணிய வேண்டும்.
எலுமிச்சை சாறு மற்றும் உப்புக்கரைசல் (ஓ.ஆர்.எஸ்.) பருக வேண்டும்.
இளநீர், மோர் குடிக்க வேண்டும். நுங்கு, வெள்ளரிக்காய் போன்ற நீர்ச்சத்து நிறைந்தவற்றை உண்ண வேண்டும்.