மார்பக புற்றுநோயை எப்படி உறுதி செய்வது?

பெண்கள் மத்தியில் மார்பக புற்றுநோய் சதவீதம் அதிகரித்து வருகிறது.

உடல் பருமன், நீர்க்கட்டி, தைராய்டு, பரம்பரை வழியாக மார்பக புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

இதனை ஆரம்ப நிலையில் கண்டறியும் பட்சத்தில் எளிதாக குணப்படுத்த முடியும்.

ஆனால் ஆரம்ப நிலையில் மார்பக புற்று நோய் இருப்பது தெரியாது. முற்றிய நிலையில் தான் உடலில் அதன் தாக்கம் தெரிய வரும்.

ஆரம்ப நிலையில் மார்பகங்களில் கட்டிகள் போன்று வரும். பெண்கள் சுய பரிசோதனை செய்து கட்டிகள் இருப்பது தெரிய வந்தால் உடனே மருத்துவரை அணுக வேண்டும்.

சிலர் தயக்கப்பட்டு வெளியே சொல்லாமல் இருக்கின்றனர்.

தாமதிப்பதால் நோய் பாதிப்பு அதிகரிக்கும். 40 வயதுக்கு மேல் உள்ள பெண்கள் அனைவரும் மார்பக பரிசோதனை செய்வது கட்டாயம்.

அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவனையில் மேமோகிராம் பரிசோதனை மூலம் பரிசோதனை செய்து மார்பக புற்றுநோய் உள்ளதை உறுதி செய்து கொள்ளலாம்.