ரத்த சோகையை தடுக்க என்ன செய்யலாம்?

ரத்தத்தில் ஹீமோகுளோபின் 12 முதல் 15 மி.கி., அளவு இருக்க வேண்டும். இது பாலினம் மற்றும் வயதுக்கு ஏற்ப சிறிது மாறுபடும்.

பருவம் அடையும் வயது முதல் 50 வயது வரை உள்ள பெண்களுக்கு அதிக பாதிப்பு ஏற்படுத்தும்.

சிறு வயது முதல் ஊட்டச்சத்து சரியான அளவில் எடுத்திருந்தால் இந்த பாதிப்பை தவிர்க்க முடியும்.

ரத்த சோகை உள்ளவர்கள் சிறு வேலை செய்தாலும் உடல் சோர்வு ஏற்படும்.

நேரம் தவறாமல் உணவு எடுத்துக் கொள்ள வேண்டும். காலை 8:00 மணி, மதியம் 1:00 மணி, இரவு 8:00 மணி என்று உணவு சாப்பிடும் நேரத்தை கடைப்பிடிக்க வேண்டும்.

'ஜங்க் புட்' வகை உணவுகளை தவிர்க்க வேண்டும்.

தினமும் 20 முதல் 30 நிமிடம் நடைப்பயிற்சி அவசியம்.

இரும்பு சத்துள்ள பேரிச்சம்பழம், கேரட், பீட்ரூட், கீரை வகைகள், பால் ஆகியவை உணவில் சேர்த்துக்கொண்டால் ரத்த சோகை ஏற்படுவதை தடுக்கலாம்.