பல் அரிப்பை எப்படி சரி செய்வது?

பல் அரிப்பு என்பது பல்லில் ஏற்படும் சிறிய துளை. நாளைடைவில் இது பெரியதாகவும் ஆழமாகவும் மாறும்.

இனிப்பு சாப்பிட்டு விட்டு சரியாக வாய் கொப்பளிக்காமல் இருப்பதே பல் அரிப்பிற்கு மூல காரணம்.

இனிப்பு பொருளுடன், வாயில் ஏற்கனவே உள்ள பாக்டீரியா செயல்பட்டு அமிலத்தைச் சுரக்கச் செய்து விடும்.

இந்த அமிலம் பற்களின் வெளிப்பூச்சு எனாமலை அழிக்கத் தொடங்கும். இதன் அடுத்தக்கட்ட நிலையாகப் பற்கள் வீணாகி விடும்.

பல் அரிப்பை சரியாகக் கவனிக்காவிட்டால் அதிகமாகி மற்ற பற்களிலும் பரவிவிடும். நாளைடைவில் இது பற்களின் வேர்களையும் தாக்கும்.

பல்லை பழைய நிலைக்கு கொண்டுவர பல் சொத்தை நீக்கி பல் அடைத்தல் அல்லது வேர் சிகிச்சை செய்யலாம்.

கடுமையான சிதைவு இருக்கும் நிகழ்வுகளில் பல் மருத்துவர் பல்லை அகற்றிவிடக்கூடும்.

இரண்டு முறை பல் துலக்குவதன் மூலம் பல் சொத்தையை கட்டுப்படுத்தலாம்.