லைக் இல்லைன்னா... அவ்வளவு தான் வாழ்க்கை !
ஸ்மார்ட்போன்களின் பயன்பாடு சாதாரணமாகிவிட்ட தற்போதைய சூழலில், பலரும் ஸ்டேட்டஸ் வைப்பதும் வாடிக்கையான ஒன்றாகும்.
அதேவேளையில், பதிவிற்கு யாரும் 'லைக்' போடவில்லை அல்லது நினைத்த எண்ணிக்கையில் லைக் வரவில்லை என்றால் மன அழுத்தத்துக்கு உள்ளாகின்றனர்.
லைக் இல்லை என்ற விஷயம் மன அழுத்தத்தை தருவதோடு, சமூக பழக்கம் என்ற ஒன்றில், வளர்ச்சியடைய வாய்ப்பில்லாமல் போய்விடுகிறது.
பொழுது போக்கிற்காக இருந்த விஷயங்கள், வாழ்க்கை என்று ஆகிவிட்டதால், உணர்வு, உறவு, மொழி என்று அனைத்தும் பிரச்னையாகி விட்டது.
மனிதனும் மனிதனும் பேசிப் பழகியது போய், மனிதனும் மிஷினும் பழகியதால், உணர்வு ரீதியான பரிமாற்றங்கள் குறையும் போது, ஒரு வெறுமை வந்து விடுகிறது; அதை எப்படி கடப்பது என்பது பலருக்கும் தெரியவில்லை.
இதனால், மன நல மருத்துவத்தில், 'நோ மோ போபியா' என்ற ஒன்று புதிதாக உள்ளது.
'மொபைல், பேஸ்புக் அடிக்ஷன் சென்டர்'கள் வரத் துவங்கியுள்ளன. சுய கட்டுப்பாடுடன், தொழில்நுட்பத்தை பயன்படுத்துவது ஒன்று தான் இதற்கு தீர்வாகும்.