பெண்களுக்கு தைராய்டு பரிசோதனை அவசியமா?
தைராய்டு என்பது தொண்டையில் அமைந்துள்ள ஒரு சுரப்பி. இது T3, T4, THS ஹார்மோன்களை உற்பத்தி செய்யும். இவை சரியாக சுரக்க வில்லை என்றால் பல பிரச்னைகள் வரும்.
செயலற்று அல்லது மிகவும் குறைவாக சுரந்தால் ஹைப்போ தைராய்டிசம் எனவும், அதிகப்படியாக சுரந்தால் ஹைப்பர் தைராய்டிசம் என அழைக்கப்படுகிறது.
முக்கியமாக இவை சரியாக சுரக்கவில்லை என்றால் உடல் சோர்வு, எடை அதிகரிப்பு,
முடி உதிர்தல், உடல் மற்றும் மனச்சோர்வு போன்றவை ஏற்படும்.
பதட்டம், எரிச்சல், பயம், தூக்கமின்மை, சோர்வு, தொண்டை வலி, அதிக இதயத் துடிப்பு, மூட் ஸ்விங், நடுக்கம், அதிக எடை இழப்பு அகியன ஹைப்பர் தைராய்டின் அறிகுறிகள்.
தைராய்டு அறிகுறிகள் தென்பட்டால் கட்டாயம் ரத்த சோதனை (TFT) செய்ய வேண்டும். இப்பிரச்னை ஆண்களைவிட பெண்களுக்கு அதிக ஏற்படுவதாக உலக சுகாதார மையம் கூறுகிறது.
பெண்களுக்கு மாதவிடாய் நின்ற பிறகு அல்லது கர்ப்பம், பிரசவம், தாய்ப்பால் கொடுக்கும் போது ஏற்படும் ஹார்மோன்களில் மாற்றங்களால் தைராய்டு சுரப்பி பாதிக்கப்படுகிறது.
எனவே பெண்கள் 30 வயதிற்குப் பின் ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை தைராய்டு பரிசோதனை செய்ய வேண்டும் என டாக்டர்கள் அறிவுறுத்துகின்றனர்.