தமிழக சட்டசபையில் வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்த 2024- 25ம் ஆண்டிற்கான வேளாண் பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள் பின்வருமாறு...

சோளம், கம்பு, கேழ்வரகு, குதிரைவாலி, தினை உள்ளிட்டவற்றைின் சாகுபடியை அதிகரிக்க தமிழக சிறுதானிய இயக்கம்.

பட்டதாரிகள் வேளாண் சாகுபடி தொழில் செய்ய ரூ.1 கோடி மானியம்

செங்காந்தள், நித்திய கல்யாணி போன்ற மூலிகை பயிர்களின் சாகுபடியை ஊக்குவிக்க ரூ.5 கோடி

வாழை மரங்கள் காற்றில் சாய்வதை தடுக்க 3,500 ஏக்கரில் கம்பு மூலம் முட்டு கொடுக்க மானியம்

அதிதிராவிடர் பழங்குடியின விவசாயிகளுக்கு மானியம் வழங்க ரூ.18 கோடி நிதி ஒதுக்கீடு.

சீவன் சம்பா என்ற பெயரில் நீரழிவு பாதிப்பை கட்டுப்படுத்தும் நெல் ஆயிரம் ஏக்கர் சாகுபடி செய்ய விதை விநியோகம் செய்யப்படும்.

ரசாயன உரங்களின் பயன்பாட்டை குறைத்து மண்ணின் வளம் காக்க ரூ.6.27 கோடி நிதி ஒதுக்கீடு.

10 லட்சம் வேப்ப மரக்கன்றகள் இலவசமாக வழங்கிட ரூ.2 கோடி நிதி ஒதுக்கீடு.

ஆடு, மாடு, கோழி, மீன் வளர்ப்போருக்கு நடைமுறை முதலீட்டுக் கடனுக்கான வட்டி மானியத்தை 200 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு.

சிறு தானியங்கள், பயிறு வகைகள், எண்ணெய் வித்துகள் பயிரிட ரூ.36 கோடி ஒதுக்கீடு.