மின்னணு சாதனங்களின் பயன்பாட்டால் அதிகரிக்கும் 'மையோபியா'

இருபது ஆண்டுகளுக்கு முன் கிட்டப்பார்வை எனப்படும் 'மையோபியா' பாதிப்பு 10 - 20 சதவீதமாக இருந்தது. தற்போது, 90 சதவீதமாக அதிகரித்து உள்ளது.

மரபியல் காரணியால் மபோபியா வரும் என்றாலும், மின்னணு சாதனங்களின் பயன்பாடு அதிகரித்து இருப்பது முக்கிய காரணம்.

தொடர்ந்து மூன்று மணி நேரத்திற்கும் மேலாக, லேப்டாப், மொபைல், கம்ப்யூட்டர், டேப்லெட் போன்ற மின்னணு சாதனங்களை பயன்படுத்தும்போது, கண்களில் பல பிரச்னைகள் வருகின்றன.

குறிப்பாக தலைவலி, தலைச்சுற்றல், பார்க்கும் பொருள் இரண்டிரண்டாகத் தெரிவது, கூர்ந்து பார்ப்பதற்கு சிரமம், மங்கலான பார்வை, கண் தசைகளின் அழுத்தம் அதிகமாகி கண்களில் அசதி, போன்ற அறிகுறிகள் ஏற்படலாம்.

இதற்கு 'டிஜிட்டல் டிரைன் சிண்ட்ரோம்' என்று பெயர். இதுவே 'கம்ப்யூட்டர் விஷன் சிண்ட்ரோம்' என்பது தொடர்ந்து கம்ப்யூட்டர் உபயோகிப்பதால் ஏற்படும் கண் கோளாறுகளைக் குறிக்கும்.

கம்ப்யூட்டரில் இருந்து வெளிப்படும் ஊதா ஒளி, கண்களின் மையப் பகுதியில் உள்ள பார்வையை உருவாக்கும் மேக்குலாவில், 'மேக்குலார் டிஜெனரேஷன்' என்ற பார்வை பாதிப்பை ஏற்படுத்தலாம்.

பொதுவாக ஒரு நிமிடத்திற்கு, 15 முறை கண்களை இமைக்க வேண்டும்.

ஊதா வெளிச்சம் கண்களை பாதிக்காத கண்ணாடிகள் பயன்படுத்தலாம். கம்ப்யூட்டர் திரையின் மேல் ஊதா ஒளியைத் தடுக்கும் திரையைப் போடலாம்.

தொடர்ச்சியாக திரையைப் பார்க்காமல், 20 நிமிடங்களுக்கு ஒருமுறை, 20 அடி துாரத்தில் உள்ள ஏதாவது ஒரு பொருளை, 20 வினாடிகள் பார்க்க வேண்டும்.

கம்ப்யூட்டர் திரை கண்களுக்கு நேராக இல்லாமல் சற்று தாழ்ந்து இருப்பதும், வெளிச்சம் குறைவாக வைத்து திரையைப் பார்ப்பதும் பலன் தரும்.