பிகில் பாண்டியம்மாவுக்கு டும் டும் டும்!

'பிகில்' திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார் இந்திரஜா.

இவர் சினிமாவில் காமெடி மற்றும் குணச்சித்ர வேடங்களில் நடித்து வரும் ரோபோ சங்கரின் மகள்.

விஜய் நடித்த பிகில் படத்தில் பாண்டியம்மா என்ற கேரக்டரில் நடித்து பிரபலமானார்.

தொடர்ந்து கார்த்தியின் விருமன் படத்திலும் நடித்தார்.

இந்திரஜா தனது உறவுக்காரரான கார்த்திக்கை காதலித்தார்.

இருவருக்கும் பெற்றோர் சம்மதத்துடன் நிச்சயதார்த்தம் நடந்தது.

கடந்த ஒருவாரமாக திருமணம் தொடர்பான நிகழ்வுகள் கொண்டாட்டமாக நடந்து வந்தன.

இந்நிலையில் இந்திரஜா - கார்த்திக் திருமணம் மதுரையில் நேற்று (மார்ச் 24) கோலாகலமாய் நடந்தது.

சின்னத்திரை, வெள்ளித்திரை பிரபலங்கள் இவர்களுடைய திருமணத்தில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

சென்னையில் விரைவில் இன்னொரு வரவேற்பு நிகழ்ச்சியை நடத்த ரோபோ சங்கர் திட்டமிட்டுள்ளார்.