இன்று சர்வதேச மக்களாட்சி தினம்!

கிரேக்க மொழியில் டெமோஸ், கிராடோஸ் வார்த்தைகளை சேர்த்தது டெமாக்ரசி ஆனது. இரு வார்த்தைகளுக்கு குடிமகன், சக்தி என்று பொருள்படும். மக்களாட்சி என்பது இதன் தமிழாக்கம் ஆகும்.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள், மக்களின் நலனுக்காக சட்டமன்றங்கள், நாடாளுமன்றங்கள், உள்ளாட்சி அமைப்புகளில் செயலாற்றுவதே மக்களாட்சியின் அடிப்படைத் தத்துவம்.

2007-ம் ஆண்டு நடைபெற்ற ஐக்கிய நாடுகள் சபையின் பொதுக்குழு கூட்டத்தில் சர்வதேச ஜனநாயக தினம் உலகம் முழுக்க கடைபிடிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டது. இந்த நாள் 192 நாடுகளில் கடைபிடிக்கப்படுகிறது.

அந்த வகையில் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 15-ம் தேதி சர்வதேச மக்களாட்சி தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

மக்களாட்சியில் ஆயிரம் குறைபாடுகள், குழப்பங்கள் இருந்தாலும், மாண்புமிக்க மக்களாட்சி முறை தொடர வேண்டும் என்பதே அனைவரின் விருப்பம்.

மக்களாட்சி தினமான இந்த நாளில், எந்தப் பரிசும் பணமும் பெறாமல், நேர்மையான மக்கள் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுப்போம் என உறுதிகொள்வோம்.