இதய நோய் வருவதற்கு நீரிழிவு ஒரு காரணமா?

பார்ப்பதற்கு ஒல்லியாக, உடல் பருமன் குறைவாக இருப்போருக்குக் கூட வயிற்றுப் பகுதியில் அதிக கொழுப்பு சேர்ந்து, இன்சுலின் உடல் முழுமையாக சுரந்து கொள்ள முடியாத தன்மை இருக்கும்.

இது இதய நோய் வருவதற்கான ஆபத்தை மேலும் அதிகரிக்கிறது. மற்ற நாடுகளுடன் ஒப்பிடும் போது, நம் நாட்டில், நீரிழிவு நோயாளிகள் அதிக ஆபத்தை எதிர்கொள்கின்றனர் என டாக்டர்கள் கூறுகின்றனர்.

இவர்களுக்கு மிக இளம் வயதிலேயே இதய ரத்தக்குழாய் அடைப்பு ஏற்படுவதோடு, இதனால் ஏற்படும் இறப்பு விகிதமும் அதிகமாக உள்ளது.

இதய ரத்தக்குழாய் நோய், இதய செயலிழப்பு, பக்கவாதம், கால்களுக்குச் செல்லும் ரத்தக்குழாய் பாதிப்பு என பல வகைகளில் இந்த பாதிப்புகள் வெளிப்படும்

அதிக ரத்த சர்க்கரை காரணமாக, நரம்பு மண்டல பாதிப்பு ஏற்பட்டு, வலியை உணர முடிவதில்லை. ரத்த ஓட்டம் குறைந்து, வலி தெரியாத வகையிலான மாரடைப்பு ஏற்படுகிறது.

இதற்கு பிரதான காரணம், கட்டுப்பாடற்ற சர்க்கரை, ரத்தக் குழாய்களின் உட்புறச் சுவர்களில் அழுத்தத்தை உருவாக்கி, நச்சுத் தன்மை கொண்ட வேதிப்பொருட்களை உருவாக்குகிறது.

இதனால், ரத்தக் குழாய்களில் வீக்கம் ஏற்படுகிறது ; இதயத்தின் மகா தமனி தடித்து, விடுகின்றன. ரத்தக் குழாய் அடைப்பு உள்ள பகுதியில் அழற்சி ஏற்பட்டு, மாரடைப்பு உண்டாகிறது.