தினமும் ஸ்மார்ட் வாட்ச் அணிவது ஆபத்தா?
பொதுவாக, நாள் முழுவதும் ஸ்மார்ட் வாட்ச் அணிவது நமது உடல்நலத்திற்கு எந்தவிதப் பாதிப்பையும் ஏற்படுத்தாது.
அதிலிருந்து வெளி வரும் வயர்லெஸ் சிக்னல்கள் உடலை பாதிக்கும் என்பதற்கு இதுவரை எவ்வித அறிவியல் ஆதாரமும் இல்லை.
ஆனால், ஸ்மார்ட் வாட்சை மிகவும் இறுக்கமாகவும் தொடர்ந்து நீண்ட நேரமும் அணிந்தால், சருமத்தில் எரிச்சல், தடிப்பு அல்லது வியர்வைத் தடங்கள் போன்ற பிரச்னைகளை ஏற்படுத்தலாம்.
அமெரிக்க நோய் கட்டுப்பாடு, தடுப்பு மைய தகவல்படி, ஸ்மார்ட் வாட்ச் போன்ற சாதனங்கள் Bluetooth போன்ற குறைந்த சக்தியுள்ள ரேடியோ அதிர்வெண் (RF) டிரான்ஸ்மிட்டர்களைப் பயன்படுத்துகின்றன.
சர்வதேசளவில் நிர்ணயிக்கப்பட்ட RF வரம்புகளுடன் ஒப்பிடும்போது, இந்த சாதனங்களிலிருந்து பயனர்கள் குறைந்த அளவிலான கதிர்வீச்சுக்கு மட்டுமே உட்படுகின்றனர் என குறிப்பிடுகிறது.
எனவே, கதிர்வீச்சு பாதிப்பு ஏற்படும் என்ற அச்சத்தினால் மட்டும் ஸ்மார்ட் வாட்ச் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டிய அவசியமில்லை என தெளிவுப்படுத்துகிறது.
இதயத்தில் பேஸ்மேக்கர் போன்ற மருத்துவ சாதனங்களைப் பொருத்திக் கொண்டவர்கள் இதை பயன்படுத்துவதில் கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.
ஏனென்றால், சில ஸ்மார்ட் வாட்ச்களிலுள்ள காந்தங்கள், இதயத்தில் பொருத்தப்பட்ட சாதனங்களின் செயல்பாடுகளில் குறுக்கிட வாய்ப்புள்ளது என்பது டாக்டர்களின் அட்வைஸாகும்.