குழந்தைகளுக்கு சளி, காய்ச்சல் அடிக்கடி வருவது இயல்பா?
தற்போது குழந்தைகளுக்கு, வைரஸ் தொற்றுகள் மூலம் ஏற்படும் சளி, காய்ச்சல், இருமல் போன்றவை தான் அதிகம் காணப்படுகிறது.
சுவாசப் பாதை நோய்கள், அலர்ஜி, ஆஸ்துமா, ஊட்டச்சத்து குறைபாடுகள், உடல் எடை அதிகமாக, குறைவாக இருப்பது போன்ற பிரச்னைகளுக்கும் சிகிச்சைக்கு வருகின்றனர்.
பெரும்பாலான பாதிப்புகள் வைரஸ் தொற்றுகளால் ஏற்படுபவை.
காய்ச்சல் மூன்று நாட்களுக்கு மேல் நீடித்தாலோ, வலிப்பு, மூச்சுத்திணறல் இருந்தாலோ உடனடியாக டாக்டரை அணுக வேண்டும்.
அதேப்போல், தொடர் வாந்தி, அதிக சோர்வு, தண்ணீர் குடிக்க முடியாத நிலை, மந்தமாக இருத்தல், போன்ற பிரச்னைகள் இருந்தாலும் டாக்டரிடம் செல்ல வேண்டும்.
குறிப்பாக, சமூக வலைத்தளங்களில் கிடைக்கும் அனைத்து தகவல்களையும் நம்பாமல், குழந்தைகள் மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது நல்லது.