முன்பகுதியில் இரண்டு பற்களில் உள்ள இடைவெளியை சரி செய்ய முடியுமா?

உடல் மற்றும் தாடையின் அமைப்பை பொறுத்து பற்களின் அளவும் வேறுபடும்.

பற்களில் இடைவெளி வருவதற்கான காரணத்தை சரியாக கண்டுபிடித்து சரிசெய்ய வேண்டும்.

பற்களின் இடைவெளியை சரிசெய்து சீராக்கி கம்பி கட்டும் சிகிச்சை செய்யலாம்.

பற்களின் மேல் கம்பி கட்டுவது சங்கடமாக இருக்கும் என நினைத்தால் 'அலைனர்' சிகிச்சை மூலம் எளிதாக பற்களின் இடைவெளியை சரிசெய்யலாம்.

பற்களின் அளவு சிறிதாக அல்லது தேய்ந்து போய் இடைவெளி இருந்தால் அதன் மேல் 'கேப்' மாட்ட வேண்டும்.

ஈறுகள் பலமாக இல்லையென்றாலும் பற்கள் நகர்ந்து இடைவெளி உண்டாகும்.

ஈறுகளுக்கு சிகிச்சை செய்து பலமாகி விட்டால் இந்த இடைவெளி சரியாகி விடும்.