ஸ்கின் பத்திரம்... வெயிலுக்கு சன்ஸ்கிரீன் போடுவது சரியா?

வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், சருமத்தைப் பாதுகாக்க சன்ஸ்கிரீன் லோஷன் பயன்படுத்துவது அவசியமாகிறது.

ஆனால் அதனைச் சரியான முறையில் பயன்படுத்தாவிட்டால் முழுமையான பாதுகாப்பு கிடைக்காது என்பது பியூட்டீசியன்களின் அட்வைஸாகும்.

பலர் வீட்டை விட்டு வெளியேறும் போது மட்டும் சன்ஸ்கிரீன் தடவுவது போதுமென நினைப்பர். ஆனால், வெளியே செல்வதற்கு 15 - 20 நிமிடங்களுக்கு முன்பே அதனைத் தடவ வேண்டும்.

அப்போதுதான் அது சருமத்தில் நன்றாக உறிஞ்சப்பட்டு முழுமையான பாதுகாப்பை அளிக்கும்.

ஒருமுறை தடவுவது மட்டும் போதாது. நீண்ட நேரம் வெயிலில் இருப்பவர்கள், 2 - 3 மணி நேரத்திற்கு ஒருமுறை மீண்டும் தடவ வேண்டும்.

வியர்வை அல்லது முகத்தைக் கழுவிய பிறகும் மீண்டும் பயன்படுத்துவது கட்டாயம்.

முகம் மட்டுமின்றி, கழுத்து, கைகள் போன்ற வெளிப்படும் பகுதிகளிலும் தடவுவது முக்கியம். தவறினால் முகம் ஒரு நிறம், கைகள் வேறு நிறமாக தோற்றம் தரும்.

எஸ்.பி.எப்., அளவும் முக்கியம். தினசரி பயன்பாட்டிற்கு குறைந்தது எஸ்.பி.எப்., 30 இருக்க வேண்டும். வெளியில் அதிக நேரம் செல்பவர்கள் எஸ்.பி.எப்., 50 வரை பயன்படுத்தலாம்.

சன்ஸ்கிரீன் பயன்படுத்திய பிறகு, சரும வகைக்கு ஏற்ப மாய்ஸ்சரைசர் பயன்படுத்துவது நல்லது. குறிப்பாக உலர் சருமம் உள்ளவர்கள் இதை தவறாமல் கடைபிடிக்க வேண்டும்.