குழந்தையின்மைக்கு பெண்களை விட ஆண்களின் மனஅழுத்தமே அதிகம் காரணமா?
மன அழுத்தத்தோடு இருக்கும் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு, குழந்தையின்மைக்கான வாய்ப்பு அதிகரித்துள்ளதாக, அமெரிக்காவில் சமீபத்தில் நடந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது.
ஆண்களுக்கு சிறிதளவு மன அழுத்தம் ஏற்பட்டாலும் குழந்தையின்மைக்கான வாய்ப்பு அதிகரிக்கும்.
அதேவேளையில், பெண்களுக்கு மிகுந்த மன அழுத்தம் ஏற்பட்டால் மட்டுமே, குழந்தையின்மைக்கான வாய்ப்பு அதிகரிக்கும் என ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மன ஆரோக்கியத்துடன் இருக்கும் ஆண்களைவிட, மன அழுத்தத்தில் இருக்கும் ஆண்களுக்கு 33% குழந்தை பிறப்பதற்கான வாய்ப்பு குறைவாக உள்ளது.
இதேபோல், ஆரோக்கியமாக இருக்கும் பெண்களை விட, மன அழுத்தத்தில் இருக்கும் பெண்களுக்கு 15% குழந்தை பிறப்பதற்கான வாய்ப்பு குறைவாக உள்ளது.
மன அழுத்தம் ஏற்பட்ட உடனே மனநல சிகிச்சை எடுப்பதன் மூலம், இப்பிரச்னையைத் தவிர்க்க இயலும் என, மனநல மருத்துவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.