ரத்தம் கொடுத்தால் உடல்நல பாதிப்பு ஏற்படுமா?
உடலில் உள்ள ரத்த சிவப்பணுக்கள் மூன்று மாதத் திற்கு ஒரு முறை புதுப்பிக்கும்.
ரத்ததானம் செய்வதால் புதிய ரத்த சிவப்பணுக்கள் உடனே உற்பத்தியாகும்.
அதனால் 18 வயது முதல் 60 வயதுக்குள் இருப்பவர்கள் ரத்த தானம் செய்யலாம்.
ஆண்கள் ஆண்டுக்கு நான்கு முறையும், பெண்கள் மூன்று முறையும் ரத்த தானம் வழங்கலாம்.
ரத்ததானம் வழங்குவதால் உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், புற்றுநோய்வருவதற்கான வாய்ப்புகள் குறைவு.
அதேபோல் ரத்தத்தில் கொழுப்பின் அளவு கட்டுக்குள் இருக்கும்.
ரத்த தானம் வழங்குவதற்கு முன்பு உடலில் உள்ள பிரச்னைகள் குறித்து டாக்டரிடம் தெரிவித்து ரத்தம் வழங்குவதற்கான தகுதியை தெரிந்து கொள்வது அவசியம்.