டீயை அதிக நேரம் கொதிக்கவிட்டால் அஜீரண பிரச்னை உண்டாகுமா?
பால் டீயை நீண்ட நேரம் கொதிக்க வைத்து குடித்தால் அது ஆரோக்கியத்திற்கு மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது.
டீயை அதிக நேரம் கொதிக்க வைத்தால் பாலின் PH மதிப்பானது மிகவும் கடினமாக மாறுகின்றது. மேலும் அக்ரிலாமைடு எனும் கார்போஹைட்ரேட் உருவாகி அது உடலுக்கு தீங்கு விளைவிக்கும்.
அதேபோல் பாலில் கால்சியம், புரதம் மற்றும் வைட்டமின் டி போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் உள்ளன. அதிக நேரம் கொதிக்க வைத்தால் இவற்றை இழக்க நேரிடும்.
மேலும் அதிக நேரம் கொதிக்கும் போது, அதன் புரத கட்டமைப்பு மாறுகிறது. இதனால் அதை குடித்தவுடன் செரிமான பிரச்னைகளுக்கு வழிவகுக்கும், வாயு வீக்கம் அதிக அளவில் ஏற்படுத்தும்.
கூடுதலாக நெஞ்செரிச்சல், வயிற்றுவலி போன்ற பல பக்கவிளைவுகளும் ஏற்பட வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
டீயின் சுவையும் கசப்பு அல்லது குடிக்க விரும்பத்தகாத வகையில் மாறிவிடும், உண்மையான மணத்தையும் இழந்துவிடும்.