தேவையான நேரத்தில் ஸ்டென்ட் வைக்காமல் இருப்பதும் தவறு

தீவிர மாரடைப்பு ஏற்பட்டு அபாய கட்டத்தில் வரும் ஒருவருக்கு அவர் உயிரைக் காப்பாற்ற ஸ்டென்ட வைப்பதே சிறந்தது.

மிதமான அடைப்புகள் உள்ள சிலருக்கு, மாத்திரையில் சரி செய்யலாம் என்று முயன்றாலும், பல நேரங்களில், நிலைமை மோசமாகுமே தவிர, மருந்து, மாத்திரைகளால் பலன் இருக்காது.

அப்படிப்பட்டவர்களுக்கு மேற்கொண்டு பிரச்னை வராமல் தடுக்க ஸ்டென்ட் வைக்க வேண்டும்.

30 - 40 % அடைப்பு இருந்தால், ஆஞ்சியோபிளாஸ்டி, பலுான் வைக்க வேண்டிய அவசியம் கிடையாது. 70 - 80 %ஐ தாண்டினால் ஸ்டென்ட் வைத்தால் தான் பலன் இருக்கும்.

நம் மரபணுவில் இதயநோய் வருவது பொதுவான ஒன்று. உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு பாதிப்பு, அதிக கொழுப்பு ஆகியவையும் காரணங்களாகும்.

ஆரோக்கியமான உணவு, துாக்கம், உடற்பயிற்சி செய்து இவற்றை கட்டுக்குள் வைக்க வேண்டும். அப்படியும் பிரச்னை வந்தால், மருந்து, மாத்திரைகள் சாப்பிடலாம்.

இதிலும் தீர்வு கிடைக்காவிடில், ஸ்டென்ட், பை - பாஸ் என்று மற்ற வாய்ப்புகளுக்கு செல்ல வேண்டும்.