இன்று சர்வதேச வெறுப்பு பேச்சு எதிர்ப்பு தினம்
ஆண்டுதோறும் ஜூன் 18ல் சர்வதேச வெறுப்பு பேச்சு எதிர்ப்பு தினம் கடைபிடிக்கப்படுகிறது.
2019-ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் பொதுச் சபை இத்தினத்தை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
வெறுப்புப் பேச்சை எதிர்ப்பது மற்றும் மனித மாண்பைக் காப்பது இதன் முக்கிய நோக்கமாகும்.
வெறுப்புப் பேச்சுகளால் பாதிக்கப்படுபவர்களுக்கு ஆதரவளிக்கப்பட வேண்டும்.
மேலும் சமூக வலைதளங்களில் நல்லிணக்கத்தை ஊக்குவித்து, இளைஞர்களுக்கு டிஜிட்டல் கல்வி வழங்குதல் தற்போது மிகவும் அவசியம்.
இணையம், நிஜ வாழ்க்கையில் பரவும் வெறுக்கத்தக்க பேச்சுக்களைக் கண்டறிந்து, அவற்றை எவ்வாறு தடுப்பது என்பதையும் கண்டறிந்து அதற்கு ஏற்ற விழிப்புணர்வு மக்களுக்கு தரவேண்டும்.
'டிஜிட்டல் யுகத்தில் தகவல் கல்வியறிவு மற்றும் இணையதள பாதுகாப்பை மேம்படுத்துதல்' என்பது இந்த ஆண்டிற்கான மையக்கருத்து.