இன்று ஆக்கிரமிப்பால் பாதிக்கப்பட்ட அப்பாவி சிறுவர்களுக்கான சர்வதேச தினம்!

அப்பாவி குழந்தைகளை பாதுகாக்கும் நோக்கில் ஐ.நா., சார்பில் ஜூன் 4ல் ஆக்கிரமிப்பால் பாதிக்கப்பட்ட அப்பாவி சிறுவர்களுக்கான சர்வதேச தினம் கடைபிடிக்கப்படுகிறது.

போர் நடக்கும் நாடுகளில் தான் ஆக்கிரமிப்பு மற்றும் ஒடுக்குமுறையால் பாதிக்கப்படும் குழந்தைகள் அதிகம் என சொல்லப்படுகிறது.

இத்தினம் துவக்கத்தில் 1982ல் லெபனான் போரினால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் மீது கவனம் செலுத்தியது.

பின் ஆக்கிரமிப்பு, ஒடுக்குமுறையால் உடல், மன ரீதியாகவும் உணர்ச்சி ரீதியாகவும் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்காக கடைபிடிக்கப்படுகிறது.

இத்தகைய மோசமான பாதிப்புகள் உலகில் இருந்து அகற்றப்பட வேண்டும் என்பது இத்தினத்தின் நோக்கம்.

மேலும் போரால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் மீதான விழிப்புணர்வை ஏற்படுத்தவும், அவர்களின் பாதுகாப்புக்காகவும் உதவிகள் செய்யப்பட வேண்டும்