குழந்தைகளிடம் அதிகரிக்கும் கிட்டப்பார்வை பிரச்னை...

குழந்தைகள் கண்ணாடி அணிவது செல்போன் மட்டுமே காரணம் என்று கூற முடியாது என டாக்டர்கள் கூறுகின்றனர்.

குழந்தைகளிடம் கிட்டப்பார்வை அதிகரிப்பதற்கு மரபியல் காரணங்களுடன் வாழ்க்கை முறையில் ஏற்பட்ட மாற்றங்களும் காரணம்.

பெற்றோருக்கு கிட்டப்பார்வை இருந்தால் குழந்தைக்கும் ஏற்படலாம்.

அதே நேரத்தில், குழந்தைகள் நீண்ட நேரம் மொபைல், டேப்லெட், கம்ப்யூட்டர் பார்ப்பது, தொடர்ந்து அருகில் வைத்து படிப்பது போன்ற நடவடிக்கைகள் தாக்கத்தை ஏற்படுத்தலாம்.

குழந்தை வளரும் போது, கண் வளர்ச்சி அடைவதால், பவரிலும் மாற்றம் ஏற்படலாம்.

ஆனால், கிட்டப்பார்வை வேகமாக அதிகரிப்பதை கட்டுப்படுத்த, தொடர்ந்து நீண்ட நேரம் அருகில் வைத்து பார்க்காமல் இடைவெளி விட வேண்டும்.

புத்தகம் அல்லது திரையை கண்களுக்கு மிக அருகில் வைத்துப் பார்க்கக்கூடாது.

இளம் வயதில் ஏற்படும் கண் வறட்சியை தவிர்க்க ஒரு நிமிடத்திற்கு 16 முறை கண் சிமிட்ட வேண்டும்.

இது குறையும் போது, கண்களின் மேற்பரப்பில் உள்ள கண்ணீர்ப்படலம் வேகமாக ஆவியாகி கண் வறட்சி, எரிச்சல், மணல் விழுந்தது போன்ற உணர்வு ஏற்படலாம்.