கோவாலா... தண்ணீர் குடிக்காத விலங்கு இது!
'கோவாலா' என்பது ஆஸ்திரேலியாவில் மட்டுமே காணக்கூடிய பாலுாட்டி வகையை சேர்ந்த விலங்கு.
இவை தண்ணீர் குடிப்பதில்லை.
தான் வசிக்கும் யூகலிப்டஸ் மரங்களின் இலைகளில் இருந்தே இதை பெறுகின்றன.
இதிலும் ஆஸ்திரேலியாவிலுள்ள 600 வகை யூகலிப்டஸ் மரங்களில், 50 வகை மரங்களின் இலையை தான் இவை உண்கின்றன.
மனிதர்களின் விரல் ரேகையை போலவே, இதற்கு ரேகை இருப்பது இதன் தனிச்சிறப்பு.
இதற்கு வால் இல்லை. வட்டமான, பஞ்சு போன்ற காதுகள், கருமையான மூக்குடன் கூடிய பெரிய தலை உள்ளது.
இதன் நீளம் 60 - 85 செ.மீ., எடை 4 - 15 கிலோ.