இன்று இந்திய கடற்படை தினம்

இந்தியாவின் கடல் பகுதிகளை பாதுகாக்கும் பணியில் கப்பல்படை முக்கிய பங்கு வகிக்கிறது.

உலகின் ஐந்தாவது பெரிய கடற்படையாகவும் திகழ்கிறது. 1947 முதல் செயல்படுகிறது.

இந்தியா - பாக்., இடையே 1971 டிச. 4ல் நடந்த போரில் 'ஆப்பரேஷன் டிரைடன்ட்' பெயரில் இந்திய கப்பல்படை பாகிஸ்தானின் துறைமுக நகரான கராச்சி மீது தாக்குதல் நடத்தி வெற்றி பெற்றது.

இதை நினைவுபடுத்தும் விதமாக டிச.4ல் இந்திய கப்பல்படை தினம் கொண்டாடப்படுகிறது.

இந்தியா, மூன்று பக்கம் கடலால் சூழப்பட்ட தீபகற்ப நாடு. இந்தியாவின் எல்லைக்கோடு பெரும்பாலும் கடற்கரையை கொண்டு தான் உள்ளது.

கடற்கரையின் நீளம் 7,517 கி.மீ.,. இதனால் கடலோர பாதுகாப்பு என்பது முக்கியமானது. மும்பை, விசாகபட்டிணம், கொச்சி, போர்ட் பிளேர் என கடற்படை 4 மண்டலங்களாக செயல்படுகிறது.

பாதுகாப்பு துறையில் வீரத்துடன் போரிட்டு, தங்களது இன்னுயிரை தியாகம் செய்த வீரர்களுக்கு 'பரம் வீர் சக்ரா', 'மகா வீர் சக்ரா', 'வீர் சக்ரா' ஆகிய விருதுகள் வழங்கி கவுரவிக்கப்படுகின்றன.