சார் தாம் யாத்திரை துவக்கம்: கங்கோத்ரி, யமுனோத்ரி கோயில்கள் திறப்பு

அட்சய திரிதியை நாளான நேற்று, 'சார் தாம் யாத்திரை' துவங்கியதையடுத்து, இமயமலையில் உள்ள கங்கோத்ரி, யமுனோத்ரி கோவில்கள் பக்தர்களின் தரிசனத்துக்காக திறக்கப்பட்டன.

உத்தரகாண்ட் மாநிலத்தில், இமயமலையின் கர்வால் பகுதியில் யமுனோத்ரி, கங்கோத்ரி, கேதார்நாத், பத்ரிநாத் ஆகிய நான்கு புனித தலங்கள் அமைந்துள்ளன.

ஆண்டுதோறும், ஏப்ரல், மே மாதங்களில், இந்த நான்கு கோவில்களுக்கும், 'சார் தாம் யாத்திரை' என்ற பெயரில் ஹிந்துக்கள் புனித யாத்திரை மேற்கொள்வது வழக்கம்.

கங்கோத்ரி கோவில், வேத மந்திரங்கள் முழங்க, நேற்று காலை 10:30 மணிக்கு திறக்கப்பட்டது.

யமுனோத்ரி கோவில் நடை காலை 11:55 மணிக்கு திறக்கப்பட்டது.

இரண்டு கோவில்களைத் தொடர்ந்து, கேதார்நாத் கோவில் நாளை திறக்கப்படுகிறது. அதன்பிறகு, பத்ரிநாத் கோவில் மே 4ல் திறக்கப்படும்.

குளிர்காலத்தில் இந்த நான்கு கோவில்களும் மூடப்பட்டிருக்கும் நிலையில், தற்போது, 'சார் தாம் யாத்திரை'க்காக திறக்கப்படுகின்றன.