கோடை துவங்கப் போகுது... நுங்கின் பயன்களை தெரிந்து கொள்வோம்!
இன்னும் சில மாதங்களில் வெயில் கொளுத்தப்போகிறது. அந்த சமயத்தில் நமது உடலுக்கு இதமளிக்கும் உணவுகளில் ஒன்றாக நுங்கு இருக்கும்.
எலும்பை வலுவாக்கும் கால்சியம் மற்றும் செல்களை பாதுகாக்கும் பைட்டோநியூட்ரியன்ட்ஸ் நிறைவாக இருக்கிறது. மேலும், நார்ச்சத்து, வைட்டமின் சி, ஏ, ஈ, கே, பி7 உட்பட பல்வேறு சத்துகள் நிறைந்துள்ளன.
சோடியம், பொட்டாசியம், மினரல்கள் நிறைந்திருப்பதால் உடலில் நீர்சத்தை பராமரிக்க உதவுகிறது. குறிப்பாக கோடையில் முதியவர்கள் தங்களுக்கு ஏற்படும் நீரிழப்பை நுங்கு சாப்பிடுவதால் சரிகட்டலாம்.
வயிறு மற்றும் செரிமானப் பிரச்னைகளுக்கு இயற்கையான மருந்தாக நுங்கு செயல்படும். மலச்சிக்கலைப் போக்கி, மலக்குடல் இயக்கத்தை மேம்படுத்தும்; அசிடிட்டி, அல்சரை குறைக்கக்கூடும்.
நுங்கில் பொட்டாசியம் இருப்பதால் சிறுநீரகப் பிரச்னைகள் உள்ளவர்கள் தவிர்க்க வேண்டும். மற்றவர்களுக்கு நுங்கில் உள்ள பொட்டாசியம், உடலில் இருந்து நச்சுக்களை வெளியேற்றி குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.
உடல் எடையை குறைக்க நீர்ச்சத்து நிறைந்த, கலோரி குறைந்த நுங்கை உணவில் சேர்க்கலாம். நீண்ட நேரத்துக்கு வயிறு நிரம்பிய உணர்வு இருப்பதால், ஆரோக்கியமாக உடல் எடையை குறைக்கலாம்.
கார்போஹைட்ரேட் உடலில் ரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கக் கூடியது. நுங்கில் அது குறைவாக இருப்பதால், நீரிழிவால் பாதிக்கப்பட்டவர்கள் தாராளமாக இதை சாப்பிடலாம்.