டென்னிஸ் எல்போ பாதிப்பை எப்படி சரி செய்யலாம்?
டென்னிஸ் எல்போ என்பது முழங்கையின் வெளிப்புறத்தில் வலியை ஏற்படுத்தும் ஒரு நிலையாகும். மருத்துவ ரீதியாக பக்கவாட்டு எபிகோண்டிலிடிஸ் என்று அழைக்கப்படுகிறது
டென்னிஸ் விளையாடும் நபர்களுக்கு இது அதிகம் காணப்பட்டதால் இதற்கு அப்படி பெயர் வந்தது. ஆனால் இது டென்னிஸ் விளையாடாத நபர்களுக்கும் ஏற்படலாம்.
டென்னிஸ் எல்போ பாதிப்பு பொதுவாக தோள், முன்னங்கை மற்றும் அவற்றை சார்ந்த தசைகளை மிக அதிகமாக உபயோகிப்பது மற்றும் தவறான உபயோகம் ஆகியவற்றால் ஏற்படுகிறது
மணிக்கட்டைச்சுற்றியும் வெளிப்புறமாகவும் வலி ஆரம்பிக்கும், கைகுலுக்கும் போதும் ஏதாவது ஒன்றை பிழியும் போதும், பொருட்களை தூக்கும்போதும், மூடியைத் திறக்கும் போதும் கூட வலி அதிகமாகும்.
டென்னில் எல்போ இருக்கும் கையைப் பயன்படுத்துவதை நிறுத்திவிட்டு, அந்த கைக்கு ஓய்வு கொடுப்பது மிகவும் முக்கியம்.
முழங்கையை மேம்படுத்த பிரேஸ், பேண்ட் அல்லது ஸ்ட்ராப் பயன்படுத்துவது வலியை அதிக அளவில் குறைக்க உதவும்.
மிகவும் கடுமையான மற்றும் தொடர்ச்சியான பாதிப்பு இருந்தால் பிசியோதெரபி எடுத்துக் கொள்வது நல்ல பலம் தரும்.
முழங்கை உட்புறம் முற்றிலும் பாதிக்கப்பட்டால் மருத்துவரின் ஆலோசனைபடி அந்த பகுதியில் அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டிய அவசியம் உள்ளது.