பெண்களுக்கான சிறந்த நகரங்கள் பட்டியல்... பெங்களூரு மீண்டும் முதலிடம்

பெண்களின் பங்களிப்பு, பாதுகாப்பு, தொழில் வளர்ச்சி ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு கடந்தாண்டு (2025) நாட்டிலுள்ள 125 நகரங்களில் ஆய்வு நடந்தது.

அதன்படி, பெண்களுக்கான சிறந்த நகரங்கள் பட்டியலில் முதல் 10 நகரங்களில் பெங்களூரு மீண்டும் முதலிடம் பிடித்துள்ளது.

பெண்கள் நடத்தும் ஸ்டார்ட்-அப்களுக்கு முதலீடு ஈர்ப்பதில் அந்நகரம் முதன்மையான மையமாகத் திகழ்கிறது.

அடுத்து, சென்னை, புனே, ஐதாராபாத், மும்பை, குருகிராம், கோல்கட்டா, ஆமதாபாத், திருவனந்தபுரம் மற்றும் கோவை ஆகிய நகரங்கள் இடம் பிடித்துள்ளன.

பெண்களுக்கான சிறந்த 5 நகரங்கள் (2025 தரவரிசை): பெங்களூரு (கர்நாடகா), சென்னை (தமிழ்நாடு), புனே (மஹாராஷ்டிரா), ஐதராபாத் (தெலுங்கானா), மும்பை (மகாராஷ்டிரா).

பெண்களுக்கான வேலை வாய்ப்புகள் மற்றும் தொழில் வளர்ச்சியை ஊக்குவிப்பதில் பெங்களூரு முதலிடத்தில் உள்ளது.

அதேசமயம், பாதுகாப்பு, பொதுச் சேவைகள் மற்றும் போக்குவரத்து வசதி போன்ற சமூக உள்ளடக்கம் சார்ந்த காரணிகளில் சென்னை தொடர்ந்து முன்னிலை வகிக்கிறது.

கடந்தாண்டு 9-வது இடத்தில் இருந்த குருகிராம், இந்தாண்டு 6-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

இந்தியாவின் மிகவும் உள்ளடக்கிய நகரங்கள் பட்டியலில் தென்னிந்திய நகரங்கள் ஆதிக்கம் செலுத்துகின்றன. முதல் 10 இடங்களில் 5 நகரங்கள் தென்னிந்தியாவைச் சேர்ந்தவை.