நுரையீரல் புற்று நோய்... யாருக்கு அதிக ஆபத்து?

பல ஆண்டுகளாக நுரையீரல் புற்று நோய் சிகரெட் பழக்கத்துடன் மட்டுமே தொடர்புபடுத்தப்பட்டு வந்தது.

புகையில் ஒரு முக்கிய ஆபத்து காரணியாக இருப்பினும், இளம் வயதினர் உட்பட சிகரெட் பழக்கம் இல்லாதவர்களுக்கும் நுரையீரலில் கட்டி, தழும்பு ஏற்படுகிறது.

நுரையீரல் புற்று நோயை கண்டறிவதில் உள்ள மிகப்பெரிய சவால்களில் ஒன்று, பலர் தங்களை முற்றிலும் ஆரோக்கியமாக உணர்கின்றனர்.

அறிகுறிகள் இல்லாவிட்டால் நோய் இல்லையென நம்பி, மருத்துவ பரிசோதனை செய்ய முன்வருவதில்லை.

நுரையீரல் புற்று நோய் புகை பிடிப்பவர்களை மட்டுமே பாதிக்கிறது என்ற எண்ணம் வரக்கூடாது.

40 வயதுக்கு மேல் மாசு, துாசி நிறைந்த சூழலில் வேலை செய்பவர்கள், சிகரெட் பழக்கம் இருப்பவர்களுடன் நெருக்கமாக இருப்பவர்கள், நுரையீரல் நோய் பாதிப்புள்ள மற்ற குடும்ப உறுப்பினர்கள்...

தொடர்ச்சியான இருமல், காரணமின்றி உடல் எடை குறைதல், மார்பு நோய் தொற்றுகள், மூச்சுத் திணறல், சளியில் ரத்தம் வருவது போன்றவற்றை அலட்சியம் செய்யக்கூடாது.

உடனடியாக முழு நுரையீரல் பரிசோதனை செய்ய வேண்டும். நுரையீரல் ஆரோக்கியமாக உள்ளதா என்பதை தெரிந்து கொள்வதே பாதுகாப்பானது.

காரணம், சிகரெட் பழக்கம் இல்லாதவர்களில் 70 சதவீதம் பேருக்கே, நுரையீரலில் கட்டி உருவாகிறது என்பதை ஆய்வுகள் உறுதி செய்கின்றன.