இன்று இந்திய ஆயுதத் தொழிற்சாலை தினம்!

இந்திய ஆயுதத் தொழிற்சாலை தினம் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 18ல் கொண்டாடப்படுகிறது.

மத்திய அரசின் கீழ் செயல்படும் ஆயுத தொழிற்சாலை வாரியம் 1787ல் மேற்கு வங்கத்தில் தொடங்கப்பட்டது. 1802 மார்ச் 18ல் உற்பத்தியைத் தொடங்கியது.

இந்நாளே (மார்ச் 18ல்) ஆயுத தொழிற்சாலை தினமாக கடைபிடிக்கப்படுகிறது.

இது 'பாதுகாப்பு துறையின் நான்காவது கை' என அழைக்கப்படுகிறது.

இதன்கீழ் 41 ஆயுதத் தொழிற்சாலைகள், 9 பயிற்சி நிறுவனங்கள்,மூன்று மண்டல மார்க்கெட்டிங் மையங்கள் செயல்படுகின்றன.

தரை, ஆகாயம், கடல் பகுதி பாதுகாப்புக்குதேவையான ஆராய்ச்சி, மேம்பாடு, தயாரிப்பு, பரிசோதனை பிரிவுகளில் செயல்படுகிறது.

இந்த நாளில், ஆயுதத் தொழிற்சாலைகள் தங்களின் அதிநவீன தயாரிப்புகள், ஆயுதங்கள் மற்றும் பாதுகாப்பு உபகரணங்களை காட்சிப்படுத்துகின்றன.

மேலும் ஆயுதத் தொழிற்சாலைகளில் பணியாற்றும் ஊழியர்களின் கடின உழைப்பு மற்றும் நாட்டின் பாதுகாப்புக்கு அவர்களின் பங்களிப்பு கவுரவிக்கப்படுகிறது