மனநலமும், உடல் நலமும் நாணயத்தின் இரு பக்கம்
மனநலம் இல்லாமல் முழுமையான உடல் நலம் இருக்க முடியாது. இவை இரண்டும் நாணயத்தின் இரு பக்கம் போன்றது.
உலகளவில் 100 கோடிக்கும் அதிகமானோருக்கு, அதாவது மொத்த மக்கள் தொகையில், 13.6% பேருக்கு மனநல பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
ஆண்களை விட பெண்களே அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் முதல் 90 வயதை கடந்தவர்கள் வரை பாதிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
மனப்பதட்டம், மனச்சோர்வு, போதைப்பழக்கம், மனச்சிதைவு, தற்கொலைகள் ஆகியவை மனநல பாதிப்புகளின் விளைவுகளே.
உலகளவில் பதிவாகும் ஒவ்வொரு, 100 உயிரிழப்புகளில் ஒன்று தற்கொலை காரணமாக உள்ளது. 15 - 29 வயது இளம் தலைமுறையினரிடம் தற்கொலை அதிகமாகிக் கொண்டே உள்ளது.
மனநலம் குறைபாடு உள்ளவர்களில், 70-83 % பேர் சிகிச்சைக்கு செல்வதில்லை. இதற்கு விழிப்புணர்வின்மை, வெட்கம், சமூக சூழல் காரணமாக உள்ளது.
இந்திய இளைஞர்களில், 20 - 30 % பேர் மனநல பிரச்னைகளிலும், 70 % மாணவர்கள் கவலை, மனஅழுத்தம் ஆகியவற்றால் பாதிக்கப்படுவதாகவும் ஆய்வுகள் கூறுகின்றன.
போதுமான உறக்கம், ஆரோக்கியமான உணவு, மென்மையான உடற்பயிற்சி, யோகா மற்றும் தியானம், சமநிலையான வாழ்க்கை முறை ஆகியவை மனநலத்துக்கு அவசியமானது.
குடும்பத்தினர், நண்பர்களுடன் உணர்வுகளை பகிர்வதுடன், எதிர்மறை எண்ணங்கள் தோன்றினால் மனநல மருத்துவரை அணுக வேண்டும்.