போலீசார் லஞ்சம் வாங்கினால் புகார் அளிக்க மொபைல் போன் எண் அறிமுகம்!
தமிழகத்தில் தற்போது லஞ்சம் வாங்கும் அரசு அதிகாரிகள் மீது வழக்கு பதிந்து, கைது நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
சென்னை மாநகர போலீசார் லஞ்சம் கேட்டால், பொதுமக்கள் புகார் அளிக்க வசதியாக, 78717 23000 என்ற பிரத்யேக மொபைல் போன் எண் வெளிப்படப்பட்டுள்ளது.
சென்னை காவல் துறையில் முதன்முறையாக, ஊழல் ஒழிப்புக்கான தனிப்பிரிவும் தொடங்கப்பட்டுள்ளது.
காவல் நிலையங்களுக்கு புகார் தர வருபவர்களிடம், போலீசார் லஞ்சம் பெற்றால் வழக்கு பதிவு செய்யப்படும்.
விசாரணையில் லஞ்சம் பெற்றது உறுதியானால் கைது நடவடிக்கை பாயும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை மாநகரில் புதிய பிரிவின் செயல்பாட்டை பார்த்து, மற்ற மாவட்டங்களில் உள்ள காவல் துறையிலும், படிப்படியாக ஊழல் ஒழிப்பு பிரிவு தொடங்கப்படும்.