தாய்த் தமிழும்.. தமிழர் பண்பாடும்... தமிழக பட்ஜெட்டில் முக்கிய அம்சங்கள் !
2024-25ம் ஆண்டிற்கான தமிழக பட்ஜெட்டை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு இன்று (பிப்.,19) சட்டசபையில் தாக்கல் செய்தார்.
அதில், தாய்த் தமிழும் தமிழர் பண்பாடும் என்ற அடிப்படையில், தமிழுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.
அதன்படி... மொழிபெயர்க்கப்பட்ட தமிழ் நூல்கள் உலகின் 100 பல்கலை நூலகங்களில் இடம்பெற ரூ.2 கோடி ஒதுக்கீடு.
சிலப்பதிகாரம், மணிமேகலையை 25 இந்திய மொழிகளில் மொழி பெயர்க்க ரூ.2 கோடி ஒதுக்கீடு.
அடுத்த 3 ஆண்டுகளில் 600 முக்கிய தமிழ் நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்படும்.
காவிரி, நொய்யல், வைகை, தாமிரபரணி நதிகளை புனரமைக்க திட்டங்கள் அறிவிக்கப்படும்.