நவராத்திரியை சுவையாக்கும் சுண்டலின் ருசியை கூட்ட டிப்ஸ்!
கொண்டைக்கடலை சுண்டல் செய்ய, முதல் நாள் இரவே ஊற வைக்க மறந்து விட்டால், அவற்றை எண்ணெய் விடாமல் வறுத்து, பிறகு குக்கரில் வேக வைத்தால் நன்றாக வெந்து விடும்.
பாசிப்பருப்பை ஊற வைத்து எடுத்து, அதன் மேல் கொதிக்கும் வெந்நீரை ஊற்றி, ஐந்து நிமிடம் மூடி எடுத்தாலே பூப்போல வெந்துவிடும். சுண்டல் செய்யும் போது குழையாது.
கடலைப்பருப்பு சுண்டலை கீழே இறக்கும் முன், வறுத்த வேர்க்கடலையை ஒன்றிரண்டாகப் பொடித்து துாவினால், சுவையாக இருக்கும்.
சுண்டலில் உப்பின் அளவு சற்று கூடிவிட்டால், கவலை வேண்டாம். வெள்ளரிப் பிஞ்சு அல்லது கேரட்டை பொடியாக நறுக்கி அல்லது துருவி சேர்த்து கிளற, உப்பு போயே போச்சு
கொலு பார்க்க வரும் குழந்தைகளுக்கு சுண்டலின் மேல் பொரி, காராபூந்தி துாவி கொடுக்க, நிமிடத்தில் காலியாகும்.
சுண்டல் நிறைய மீந்து விட்டால், மிக்சியில் சுண்டலை சற்று கரகரப்பாக அரைத்து, அதனுடன் சிறிது கடலைமாவு, கொஞ்சம் கார்ன்ப்ளோர் சேர்த்து கெட்டியாக பிசைந்து, விரும்பிய வடிவத்தில் தட்டி கொள்ளவும்.
இதை, ரஸ்க் துாளில் புரட்டி, கட்லட் போல காய்ந்த எண்ணெயில் பொரித்தெடுக்க, சுண்டல் கட்லெட் தயார்.