ஆரோக்கிய உணவை தேர்வு செய்வது நம்மிடமே இருக்கிறது!
நாம் சாப்பிடும் உணவு, சமச்சீரான சத்துள்ள உணவாக இருக்க வேண்டும். உணவில் நான்கு சத்துக்கள் இருப்பது அவசியம்.
மாவுச்சத்து 40 சதவீதம், புரதச்சத்து 30 சதவீதம், கொழுப்புச்சத்து 15 சதவீதம் மற்றும் வைட்டமின்கள், ஐந்து சதவீதம் இருக்க வேண்டும்.
சரியான நேரத்துக்கு துாங்கி, அதிகாலை எழும் பழக்கம் வழக்கமாக இருப்பது நல்லது. சிலர் கொழுப்பு சத்தை தவிர்த்து வருகின்றனர், அது தவறாகும்.
நம் உடலுக்கும், 15 சதவீத கொழுப்பு அவசியம். உடலுக்கு தேவையான எனர்ஜி கொழுப்பில் இருந்துதான் கிடைக்கிறது.
இன்றைக்கு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை, சந்திக்கும் சிக்கலான பிரச்னை உடல் பருமன்தான்.
இதற்கு முறையற்ற உணவும், உடற்பயிற்சி இல்லாததும் தான் முக்கிய காரணம்.
எண்ணெய்யில் வறுத்த உணவுகள், செயற்கையான முறையில் தயாரிக்கப்படும் துரித உணவுகளை தவிர்க்க வேண்டும்.
நாம் சாப்பிடும் உணவில் நோயும், ஆரோக்கியமும் சேர்ந்தே இருக்கிறது. நாம்தான் நோயை தரும் உணவை நீக்கி, ஆரோக்கியமான உணவை சாப்பிடவேண்டும்.